/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு மகளிர் கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
/
சூணாம்பேடு மகளிர் கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
சூணாம்பேடு மகளிர் கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
சூணாம்பேடு மகளிர் கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2025 12:10 AM

சூணாம்பேடு, சூணாம்பேடில், சிரமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மகளிர் கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட சூணாம்பேடு காலனி பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஊராட்சி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திண்டிவனம் சாலை ஓரத்தில் மகளிர் கழிப்பறை வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு திறந்தது.
ஆரம்பத்தில், பெண்கள் இந்த கழிப்பறை வளாகத்தை பயன்படுத்திய நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், நாளடைவில் பழுதடைந்தது.
இதையடுத்து பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன், 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மகளிர் கழிப்பறை வளாகம் சீரமைக்கப்பட்டது.
ஆனால், சிரமைப்புப் பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், பூட்டியே உள்ளது.
இதனால், இப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்க கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மகளிர் கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.