/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
/
புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 10, 2025 01:46 AM

அச்சிறுபாக்கம்:களத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
களத்துாரில் இருந்து ஜெ.ஜெ.,நகருக்குச் செல்லும் சாலையோரம், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
இந்த வளாகத்திற்குள் கழிப்பறைகள், குளியலறை, துணி துவைக்கும் கல் ஆகிய வசதிகள் உள்ளன.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து இருந்ததால், 15வது மாநில நிதி குழு திட்டம், 2021 - 22ன் கீழ், 1.82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இந்த கழிப்பறை வளாகம் புதுப்பிக்கப்பட்டது.
ஆனால், பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலா கியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், கழிப்பறை வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
எனவே, புதுப்பிக்கப்பட்ட இந்த கழிப்பறை வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.