/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலுார் ரயில் நிலைய கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
/
பாலுார் ரயில் நிலைய கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
பாலுார் ரயில் நிலைய கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
பாலுார் ரயில் நிலைய கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
ADDED : மே 01, 2025 01:20 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் ரயில் தடத்தில், பாலுார் ரயில் நிலையம் உள்ளது.
திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்களும், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இந்த ரயில் நிலையத்தில் தினமும் நின்று செல்லும்.
இந்த ரயில் நிலையத்தை ரெட்டிபாளையம், பாலுார், சாஸ்திரம்பாக்கம், சீத்தனஞ்சேரி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள நவீன கழிப்பறை கட்டப்பட்டு, பல ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
தினமும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, தாம்பரம், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களுக்கு, நுாற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
அதே போல செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் பயணியர் சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறை பூட்டியே கிடப்பதால், பயணியர் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பொது வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, ரயில் நிலையத்தில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
தற்போது பயணியர், இந்த கழிப்பறை அருகே, தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் இந்த கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.