/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டூ - வீலர் 'பார்க்கிங்' திறக்க கோரிக்கை
/
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டூ - வீலர் 'பார்க்கிங்' திறக்க கோரிக்கை
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டூ - வீலர் 'பார்க்கிங்' திறக்க கோரிக்கை
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டூ - வீலர் 'பார்க்கிங்' திறக்க கோரிக்கை
ADDED : டிச 24, 2025 06:05 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள அடுக்குமாடி இருசக்கர வாகன பார்க்கிங்கை திறக்க பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களுக்கு, செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக இருக்கிறது.
இங்கிருந்து சென்னை கடற்கரை மற்றும் காஞ்சிபுரத்திற்கு 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 60,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சென்னை, மறைமலை நகர், தாம்பரம் கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகள், உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு, தினமும் சென்று வருகின்றனர்.
இந்த பயணியர் தங்கள் கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்கள் ரயில் நிலையம் வந்து, பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால் பயணியர் தங்களின் இருசக்கர வாகனங்களை சாலை ஓரம் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள காலி இடங்களில் நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகனங்கள் திருடப்பட்டு வருவதும் தொடர்கதையாக உள்ளது.
இதையடுத்து, ரயில் நிலையத்தை, மறு சீரமைப்பு பணி செய்ய 22.14 கோடி ரூபாயில் அம்ரித் பாரத் திட்டத்தில் ஒரு பகுதியாக, மூன்றடுக்கு கொண்ட அடுக்குமாடி இருசக்கர வாகன பார்க்கிங் கடந்த 3 ஆண்டுகளாக கட்டப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் பயணியர் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. எனவே விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் பயணி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு நகர பகுதியில் ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இரண்டு இடங்களிலும் இருசக்கர வாகனங்கள் திருடு போவது தொடர் கதையாக உள்ளது. ரயில் நிலைய பகுதியில் புதிய 'பார்க்கிங்' கட்டடம் திறக்கப்படும் போது திருட்டு மற்றும் நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது. எனவே இதை திறக்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

