தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

 மாமல்லைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

 மாமல்லைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை


ADDED : ஏப் 24, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: கோடை விடுமுறை காலத்தில் மாமல்லபுரத்திற்கு, கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்களை காண, தினமும் 1000க்கும மேற்பட்ட சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.

சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாமல்லபுரத்திற்கு, அரசுப் பேருந்துகள் மிகவும் குறைவாகவே இயக்கப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், விடுமுறையை கழிக்க வரும் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.

செங்கல்பட்டு - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 508 அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 588 மாநகர் பேருந்து இயக்கப்படுகிறது.

குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்திற்காக பயணியர் நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

அதேபோல், வெளியூர்களில் இருந்து இங்கு வரும் பயணியர், போதிய பேருந்தின்றி, நெரிசலில் சிக்கியும் தவிக்கின்றனர். முதியோர், பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே கோடை காலத்தில் கூடுதல் பேருந்துகளும், தகிக்கும் வெயிலில், குளிர்சாதன பேருந்துகளும் இயக்க நகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us