தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சோத்துப்பாக்கம் - திண்டிவனம் வரை பேருந்துகள் இயக்க கோரிக்கை

 சோத்துப்பாக்கம் - திண்டிவனம் வரை பேருந்துகள் இயக்க கோரிக்கை

 சோத்துப்பாக்கம் - திண்டிவனம் வரை பேருந்துகள் இயக்க கோரிக்கை


ADDED : ஜூன் 08, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேல்மருவத்துார்: சோத்துப்பாக்கத்தில் இருந்து ராமாபுரம், ஒரத்தி வழியாக திண்டிவனம் இடையே நகர பேருந்துகளை இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்மருவத்துார் சோத்துப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மதுராந்தகம், செய்யூர் பகுதிகளை சேர்ந்த பலரும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை ஆகிய நகரங்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில், வேலைக்கு சென்று வருகின்றனர்.

சோத்துப்பாக்கம் அருகே உள்ள கிராம பகுதிகளான எலப்பாக்கம், ராமாபுரம், ஒரத்தி, அனந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால், தவித்து வருகின்றனர்.

இதனால், இப்பகுதிக்கு கல்வி பயில செல்லும் மாணவ -- மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர், மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சோத்துப்பாக்கத்தில் இருந்து திண்டிவனம் பகுதிக்கு நகர பேருந்துகள் இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us