/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பஸ் முனையம் எதிரே அணுகு சாலையில் பஸ் நிறுத்த கோரிக்கை
/
கிளாம்பாக்கம் பஸ் முனையம் எதிரே அணுகு சாலையில் பஸ் நிறுத்த கோரிக்கை
கிளாம்பாக்கம் பஸ் முனையம் எதிரே அணுகு சாலையில் பஸ் நிறுத்த கோரிக்கை
கிளாம்பாக்கம் பஸ் முனையம் எதிரே அணுகு சாலையில் பஸ் நிறுத்த கோரிக்கை
ADDED : மார் 16, 2025 01:42 AM

கிளாம்பாக்கம்,:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, அணுகு சாலையில் பேருந்துகளை நிறுத்தாமல், ஜி.எஸ்.டி., சாலையில் நிறுத்தி, பயணியரை இறக்கி விடுவதால், போக்குவரத்து குளறுபடி, விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பயணிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் உள்ளே செல்கின்றன. மாறாக, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி பயணிக்கும் மாநகர பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே செல்வதில்லை.
அப்படி செல்வதென்றால், வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பில் திரும்பி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே சென்று, மீண்டும் தாம்பரம் நோக்கி செல்ல கூடுதலாக 2.5 கி.மீ., பயணிக்க வேண்டும்.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் பயணியர் இறக்கி விடப்படுகின்றனர். இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்தில் குளறுபடி, இடையூறு ஏற்படுகிறது. தவிர, சாலையைக் கடக்கும் பொதுமக்கள் மீது, வாகனங்கள் மோதி உயிர்பலி நிகழவும் வாய்ப்புள்ளது.
எனவே, அணுகு சாலையில் பேருந்தை நிறுத்தவும், பொதுமக்கள் பத்திரமாக சாலையைக் கடக்க, 24 மணி நேரமும் போலீசார் பணி செய்யவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.