/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடுகள் இறப்பை தடுக்க கோரிக்கை
/
மாடுகள் இறப்பை தடுக்க கோரிக்கை
ADDED : ஜூலை 24, 2025 10:17 PM
செங்கல்பட்டு:கால்நடைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், சப் - கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில்,நடந்தது.
கூட்டத்தில், விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள்:
திருப்போரூர் அடுத்த பெரிய விப்பேடு கிராமத்தில், கடந்த சில நாட்களாக சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய் தாக்கி, 10 மாடுகள் இறந்துள்ளன.
இதனால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் இறப்பை தடுக்க, தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செம்பாக்கம் பகுதியில் நிரந்தரமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கோரிக்கைகள் விடுத்தனர்.