/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்த கோரிக்கை

ADDED : நவ 03, 2024 12:33 AM

கூவத்துார்:கூவத்துார் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதுவே கடலுார், தென்பட்டினம், வேப்பஞ்சேரி, நெற்குணப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கு பிரதான ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது.
இதன் வாயிலாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொது மருத்துவம், மகப்பேறு, அவசர சிகிச்சை, நோய்த்தடுப்பு என பல்வேறு சேவைகளில் பயனடைந்து வருகின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் போதிய இட வசதி இல்லாமல், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து கடலுாரை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் கூறியதாவது:
உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூவத்துாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகிறோம்.
மருத்துவம் பார்க்கும் இடம், காத்திருக்கும் பகுதி, மருந்து வழங்கும் இடம், ஊசி போடும் இடம் என, அனைத்தும் சேவைகளும் ஒரே கட்டடத்தில் வழங்கப்படுகிறது. இதனால் இடவசதி இல்லாமல், கூட்ட நெரிசலில் கர்பிணிகள், முதியோர் கடும் சிரமப்படுகின்றனர்.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் அமைத்துத் தர நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.