/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதலியார்குப்பம் கால்நடை மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
/
முதலியார்குப்பம் கால்நடை மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
முதலியார்குப்பம் கால்நடை மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
முதலியார்குப்பம் கால்நடை மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
ADDED : டிச 27, 2025 05:56 AM

செய்யூர்: முதலியார்குப்பம் கிராமத்தில் 10 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கால்நடை மருத்துவமனையை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 200க்கும் மேற்பட்டோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, முதலியார்குப்பம் கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது.
நயினார்குப்பம், ஓதியூர், தழுதாலிக்குப்பம், பனையூர் போன்ற கிராமங்களில் கால்நடை வளர்க்கும் மக்கள், தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், அம்மை நோய் தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில், போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக, இந்த கால்நடை மருத்துவமனை பூட்டியே உள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், 5 கி.மீ.,யில் உள்ள கடப்பாக்கம் கால்நடை மருத்துவமனை அல்லது செய்யூர் கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. எனவே, கால்நடைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முதலியார்குப்பம் கால்நடை மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

