/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 11:20 PM
வண்டலுார், வண்டலுார், ஏரிக்கரை சாலையில், கடந்த இரண்டு ஆண்டாக மூடி இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி, ஏரிக்கரை சாலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே, கடந்த 2018ல், எம்.எல்.ஏ., நிதியின் கீழ், 6.50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இதன் வாயிலாக தினமும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்கள் வீட்டிற்கு தேவையான குடிநீரை பெற்று பயனடைந்தனர்.
இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், மோட்டார் பழுதானதால், குடிநீர் நிலையம் மூடப்பட்டது.
பழுதான மோட்டாரை சரி செய்யும்படி, பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை.
எனவே, பழுதான மோட்டாரை சரி செய்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.