/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுக்கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை
/
மதுக்கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை
ADDED : செப் 09, 2025 12:46 AM
திருப்போரூர், திருப்போரூர் பேரூராட்சியில், திருப்போரூர்- இள்ளலுார் சாலையில் அமைந்துள்ள மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சி பகுதியில், ஓ.எம்.ஆர்., சாலையில் பேருந்து நிலையம், ரவுண்டானா, மாமல்லபுரம் சாலை, இள்ளலுார் சாலை ஆகிய 4 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வந்தது.
தமிழகம் முழுதும் 500 மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது.
இதில், திருப்போரூரில் மாமல்லபுரம் சாலை, பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு மதுக்கடை, ரவுண்டானா அருகே இருந்த ஒரு மதுக்கடை மூடப்பட்டது. தற்போது, இள்ளலுார் சாலையில் ஒரு மதுக்கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபானக்கடையை கடந்து தான் இள்ளலுார், செங்காடு, காயார், வெண்பேடு, காட்டூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு மக்கள், பள்ளி மாணவ , மாணவியர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பேருந்து வராத நேரங்களில் ஆட்டோ, சைக்கிள், பைக் போன்ற வற்றிலும், சிலர் நடந்தும் கிராமங்களுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு, செல்லும் வழியிலேயே மதுக்கடை உள்ளதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
மேலும், அருகிலுள்ள ஏரிக்கரை, வனப்பகுதி மற்றும் வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பல்வேறு பொருட்களை அங்கேயே வீசிச்செல்கின்றனர்.
இச்சாலை ஏற்கனவே குறுகியதாக இருப்பதால் மதுவாங்க வருவோர், குடித்துவிட்டு வருவவோர்களால் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது.
எனவே, இந்த ஒரே மதுக்கடையை ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.