/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
/
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 19, 2025 01:22 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு பெரும்பேர் கண்டிகை குளக்கரை அருகே பழமையான எல்லையம்மன் கோவில் உள்ளது.
அனந்தமங்கலத்தில் இருந்து பெரும்பேர் கண்டிகை, திருமுக்காடு, அச்சிறுபாக்கம் வழியாக சென்னை வரை தடம் எண் : 120ஏ பேருந்து இயக்கப்பட்டது.
தினமும், இருமுறை அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்து, எல்லையம்மன் கோவில் நுழைவுவாயில் அருகே உள்ள ஆலமரம் வளர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
அதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், 2. கி.மீ துாரத்தில் உள்ள தொழுப்பேட்டிற்கு சென்று, பேருந்தில் சென்று வருகின்றனர்.
மேலும், விசேஷ நாட்கள் மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு, தனியார் பேருந்துகள், வேன்களில் செல்லும் நபர்கள், பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவில் அருகே உள்ள ஆலமரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், மாற்றுப் பாதையை தேடி செல்கின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை அப்புறப்படுத்தக் கோரி, ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், ஆய்வு செய்து, போக்குவரத்திற்கு ஆலமரத்தை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

