/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை
/
போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை
போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை
போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 09:49 PM
பெருங்களத்துார்:பெருங்களத்துாரில் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தை ஒட்டி, பீர்க்கன்காரணை ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்வேரியின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன. இதனால், சிறிய குட்டை போல் மாறிவிட்டது.
மழை காலத்தில் இவ்வேரி நிரம்பினால், உபரி நீர், ஏரிக்கரை எம்.ஜி.ஆர்., சாலையை கடந்து, போக்கு கால்வாய் வழியாக, அருகேயுள்ள சித்தேரிக்கும் செல்லும்.
சில ஆண்டுகளுக்கு முன், உபரி நீர் வெளியேறும் இடத்தில் மூன்று கண் மதகு கட்டப்பட்டது. அப்போது, கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக மதகு கட்டியதாக புகார் எழுந்தது.
இது குறித்து கேட்டதற்கு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், போக்கு கால்வாயில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
கால்வாயின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாமல் சுவர் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், இப்பணி இரவில் நடப்பதால், சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
எனவே, இவ்விஷயத்தில், பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.