ADDED : மார் 31, 2026 08:02 PM

அ நிறம் | அளவு
மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அப்புறப்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம், சென்னை- -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ளது.
இந்த, அலுவலக பகுதியில் உள்ள மின்கம்பத்தில், செடி, கொடிகள் படர்ந்து மின்வினியோகம் தடைபட்டு வருகிறது.
இதனால், அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு மின்சாதன பொருட்கள் வீணாகி வருகின்றன.
எனவே, மின்வாரியத் துறையினர் மின் கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
