/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
/
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 24, 2024 01:27 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், எல்லையம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் எதிரே பெரும்பேர்கண்டிகையில் இருந்து சீதாபுரம் வழியாக திருமுக்காடு, திம்மாபுரம், மதுார், எலப்பாக்கம் வரை செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையில், எல்லையம்மன் கோவில் எதிரே உள்ள ஆலமரம் சாலையை ஒட்டி வளர்ந்து உள்ளது. இதனால், இவ்வழியாக பள்ளி பேருந்துகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் எடுத்துச் செல்வதற்கு சிக்கலாக உள்ளது.
இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்கள் மட்டுமே, இச்சாலையை பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.