/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் நகரில் விதிமீறல் பேனர் அகற்ற கோரிக்கை
/
திருப்போரூர் நகரில் விதிமீறல் பேனர் அகற்ற கோரிக்கை
திருப்போரூர் நகரில் விதிமீறல் பேனர் அகற்ற கோரிக்கை
திருப்போரூர் நகரில் விதிமீறல் பேனர் அகற்ற கோரிக்கை
ADDED : அக் 27, 2025 11:26 PM

தி ருப்போரூர் பேரூராட்சி ஓ.எம்.ஆர்., சாலையில், காலவாக்கம் ரவுண்டானா முதல் திருப்போரூர் ரவுண்டானா வரையுள்ள சாலை, முக்கிய நகர் பகுதியாக உள்ளது.
இதற்கிடைப்பட்ட துாரத்தில் பேருந்து நிலையம், கந்தசுவாமி கோவில், தனியார் கல்லுாரி, தனியார் திருமண மண்டபங்கள், வணிக கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களில், மனைப்பிரிவு விளம்பரம், அரசியல், சுப நிகழ்ச்சி விளம்பரம் சார்ந்த பேனர்கள் விதிமீறி வைக்கப்பட்டுள்ளன. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகின்றன. எனவே விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.கிருஷ்ணமூர்த்தி,
திருப்போரூர்.