/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை
/
சேதமான சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2025 12:21 AM

சித்தாமூர்:சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம், குழந்தைகள் நல அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் 5.95 லட்ச ரூபாயில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த மேல்நிலைத் தேக்கத்தொட்டி இடித்து அகற்றப்பட்டபோது, சுகாதார வளாகத்தின் மீது தொட்டி சாய்ந்து சுவர்கள் சேதம் அடைந்தன.
எனவே, சேதமடைந்துள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.