/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாடற்ற சிறிய குடிநீர் தொட்டி சீரமைத்து இயக்க வேண்டுகோள்
/
பயன்பாடற்ற சிறிய குடிநீர் தொட்டி சீரமைத்து இயக்க வேண்டுகோள்
பயன்பாடற்ற சிறிய குடிநீர் தொட்டி சீரமைத்து இயக்க வேண்டுகோள்
பயன்பாடற்ற சிறிய குடிநீர் தொட்டி சீரமைத்து இயக்க வேண்டுகோள்
ADDED : மார் 31, 2025 02:20 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடில், அரசினர் மாணவர் விடுதி அருகே அமைக்கப்பட்ட சிறிய குடிநீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளதால், அதை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
தொழுப்பேடு- - சூணாம்பேடு மாநில சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிவாசிகளின் நலன் கருதி, 5 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், தொழுப்பேடில் ஆழ்த்துளை கிணறு, மின் இணைப்புடன் கூடிய சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
சாலையோரம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் சாலையை பயன்படுத்துவோரின் தாகம் தீர்த்து வந்தது.
தற்போது, இந்த குடிநீர் தொட்டி கடந்தாண்டு முதல் பயன்பாடின்றி, முட்புதர் வளர்ந்து உள்ளது. இதனால், இப்பகுதிவாசிகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சிறிய குடிநீர் தொட்டியை சீரமைத்து, மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.