/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பட்டு குடிநீர் கிணற்றை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
/
கல்பட்டு குடிநீர் கிணற்றை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
கல்பட்டு குடிநீர் கிணற்றை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
கல்பட்டு குடிநீர் கிணற்றை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 21, 2025 02:04 AM

சித்தாமூர்:குடிநீர் கிணற்றை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே கல்பட்டு ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு காலனி பகுதியில், 220க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, ஏரிக்கரையில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த தண்ணீரை குடிநீராகவும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதுள்ள கிணறு, 60 அடி ஆழம் உள்ளது.
கோடைக்காலத்தில் ஏரியில் தண்ணீர் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், குடிநீர் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கல்பட்டு குடிநீர் கிணற்றை, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.