/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மழைநீர் வடிகால் சீரமைக்க கோரிக்கை
/
சேதமான மழைநீர் வடிகால் சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 07, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலுார்:வண்டலுார், ஜி.எஸ்.டி., சாலையில் மோசமான நிலையில் உள்ள வடிகால்களை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான, 29 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலையை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை பராமரித்து வருகிறது.
இந்த சாலையில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வடிகால் அனைத்தும், துார்ந்த நிலையில் மழைநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.
பருவ மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், வடிகால்களை துார்வாரி, மழை நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.