/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிணற்றில் குப்பை குவிப்பு துார் வாரி சீரமைக்க கோரிக்கை
/
கிணற்றில் குப்பை குவிப்பு துார் வாரி சீரமைக்க கோரிக்கை
கிணற்றில் குப்பை குவிப்பு துார் வாரி சீரமைக்க கோரிக்கை
கிணற்றில் குப்பை குவிப்பு துார் வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 17, 2025 01:57 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, நான்காவது வார்டில் உள்ள குடிநீர் கிணற்றை, துார் வாரி சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் நான்காவது வார்டு, வடக்கு நகர் இரண்டாவது தெருவில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் கிணறு தோண்டப்பட்டது.
அந்த கிணற்று நீரை, பகுதிவாசிகள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, இந்த கிணறு பயன்பாடு இல்லாமல், குப்பை கொட்டும் இடமாக மாறி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், இப்பகுதி குழந்தைகள் ஆபத்தை உணராமல், கிணறு உள்ள பகுதியில் விளையாடுகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் கிணற்றில் உள்ள குப்பையை துார் வாரி சீரமைத்து, இரும்பு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.