/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை
பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை
பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 16, 2025 11:56 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, பாக்கம் ரயில்வே கேட் பகுதியிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து பாக்கம் வழியாக தாதங்குப்பம், புளிக்கொரடு, வசந்தவாடி செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை பகுதியில், செங்கல்பட்டு -- விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளம் உள்ளது.
பாக்கத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடந்த போது, அப்பகுதியில் வாகனங்கள் கடக்கும் இடத்தில் இருந்த தார்ச்சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது.
தற்போது, அப்பகுதியில் இரும்பு கம்பிகள் மற்றும் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயமடை கின்றனர்.
மேலும், சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களின் டயர்கள், ஜல்லி கற்கள் மற்றும் இரும்பு கம்பிகள் குத்தி 'பஞ்சர்' ஆகின்றன.
எனவே, வாகனங்கள் கடக்கும் தண்டவாளப் பகுதியில், சாலையை சீரமைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.