ADDED : ஏப் 09, 2026 05:47 PM

திருப்போரூர்:இள்ளலுார் - வீராணம் சாலை சந்திக்கும் பகுதியில் சேதமான மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சி, இள்ளலுார் சாலை, வீராணம் சாலை சந்திக்கும் பகுதி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். பைக் முதல் கனரக வாகனங்கள் வரை ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், இள்ளலுார் சாலை, வீராணம் சாலை சந்திக்கும் பகுதியில் சாலை ஓரம் மின்கம்பம் ஒன்று உடைந்து விரிசலுடன் காணப்படுகிறது.
இந்த கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, ஆபத்து ஏற்படும் முன், மின்வாரியத்தினர் பழைய மின்கம்பத்தை மாற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
----------------
