/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்க வேண்டுகோள்
/
நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்க வேண்டுகோள்
நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்க வேண்டுகோள்
நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 23, 2025 10:02 PM
திருப்போரூர்:ஆலத்துார் சிட்கோவிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் இயக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் அடுத்த ஆலத்துார் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், ஆலத்துாரில் உள்ள சிட்கோவில், 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், 15,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
கொரோனா பாதிப்புக்கு முன், ஆலத்துார் சிட்கோவிலிருந்து திருப்போரூர், கேளம்பாக்கம், மத்திய கைலாஷ், சைதாப்பேட்டை வழியாக, சென்னை தி.நகர் வரை '519ஏ' மாநகர பேருந்து இயக்கப்பட்டது.
கொரோனா பரவலின் போது இப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என, பல தரப்பினரும் போக்குவரத்துக்கு வழியின்றி சிரமப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை, மீண்டும் துவங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் ஆலத்துார், திருப்போரூர் வழியாக அடையாரில் இருந்து மாமல்லபுரம் வரை தடம் எண் '568' பேருந்தும், கல்பாக்கத்திலிருந்து பிராட்வே வரை தடம் எண் '119' ஆகிய பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்த பேருந்துகளும் கொரோனாவின் போது நிறுத்தப்பட்டன. பயணியர் நலன் கருதி, இந்த பேருந்துகளையும் மீண்டும் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் குறைத்தீர் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சினேகாவிடமும், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.