தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புதுச்சேரி - சென்னை பேருந்துகள் கூடுதலாக இயக்க கோரிக்கை

 புதுச்சேரி - சென்னை பேருந்துகள் கூடுதலாக இயக்க கோரிக்கை

 புதுச்சேரி - சென்னை பேருந்துகள் கூடுதலாக இயக்க கோரிக்கை


ADDED : மார் 19, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூவத்துார்:புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூவத்துார் பேருந்து நிறுத்தம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், கடலுார், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்வது வழக்கம். இப்பேருந்து நிறுத்தத்தில் பணி நிமித்தம், வெளியூர்களுக்கு செல்வோர் என தினமும் 100க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமைகளில், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை நேரங்களில் பேருந்துகளில், அதிக கூட்டம் நிரம்பி வழிவதால் கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. காலை நேரங்களில் சென்னை செல்பவர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து தான் கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணியர் கூறியதாவது:

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் வார நாட்களில் திங்கள் கிழமைகளில் மட்டும் கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. புதுச்சேரியிலேயே கூட்டத்தால் பேருந்து நிரம்பி விடுகிறது.

இதனால் பணிக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள், கல்லுாரி மற்றும் பணி நிமித்தமாக செல்லும் பலர் பெரும் சிரமப்பட வேண்டியதுள்ளது.

எனவே, வாரத்தின் முதல்நாளில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளை அதிகபடுத்த வேண்டும். அல்லது கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us