/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி இ-சேவை மையத்தில் கூடுதல் இருக்கை அமைக்க கோரிக்கை
/
கூடுவாஞ்சேரி இ-சேவை மையத்தில் கூடுதல் இருக்கை அமைக்க கோரிக்கை
கூடுவாஞ்சேரி இ-சேவை மையத்தில் கூடுதல் இருக்கை அமைக்க கோரிக்கை
கூடுவாஞ்சேரி இ-சேவை மையத்தில் கூடுதல் இருக்கை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 04, 2025 01:36 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில், காத்திருப்போர் இருக்கைகள் சேதமடைந்துள்ள நிலையில், கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. இதில் உள்ள, 258 தெருக்களில், 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.
இங்கு, ஜி.எஸ்.டி., சாலையில், இயங்கி வரும் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது.
புதிய ஆதார் அட்டை பதிவு, முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க, நாளொன்றுக்கு 80க்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர்.
இந்த இ - சேவை மையத்தின் அலுவலகம் உள்ளே, போதிய இடவசதி இல்லை. இதனால், ஒருவருக்கான சேவை முடிந்த பின்னரே, மற்றவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நேரத்தில், இ-சேவை மையத்திற்கு வந்துள்ள மற்ற நபர்கள் காத்திருக்க, அலுவலகத்தின் வெளியே, மரத்தடியில் எட்டு நபர்கள் அமரும்படி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், நால்வர் அமரும் தொகுப்பு இருக்கை, கடந்த வாரம் சேதமடைந்தது. தற்போது, நால்வர் அமர்வதற்கு மட்டுமே இருக்கைகள் உள்ளன.
ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் வரும் போது, அனைவரும் அமர்வதற்கு காத்திருப்போர் இருக்கை போதுமான எண்ணிக்கையில் இல்லை.
இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் கால் வலிக்க நிற்கின்றனர்.
எனவே, குறைந்தபட்சம் 10 நபர்கள் அமரும்படி, இருக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

