/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கோர்ட் வளாகத்தில் 'பார்க்கிங்' அமைக்க கோரிக்கை
/
செங்கை கோர்ட் வளாகத்தில் 'பார்க்கிங்' அமைக்க கோரிக்கை
செங்கை கோர்ட் வளாகத்தில் 'பார்க்கிங்' அமைக்க கோரிக்கை
செங்கை கோர்ட் வளாகத்தில் 'பார்க்கிங்' அமைக்க கோரிக்கை
ADDED : அக் 26, 2025 10:06 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட, 13 நீதிமன்றங்கள் உள்ளன.
இந்த நீதிமன்ற வளாகத்திற்கு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, பல்வேறு வழக்குகள் தொடர்பாக வழக்காடிகள் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இவர்களின் வாகனங்களை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நீதிமன்ற ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
நீதிமன்றம் அருகில் உள்ள, செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலை, மதுராந்தகம் - செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில், அணுகுசாலையை ஆக்கிரமித்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், பாதசாரிகள் சாலையின் நடுவே விபத்து அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதை தவிர்க்க, நீதிமன்ற வளாகத்தில், வாகன நிறுத்தம் ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

