/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கைலாசநாதர் மலைக்கோவிலில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
/
கைலாசநாதர் மலைக்கோவிலில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 07, 2024 09:51 PM

திருப்போரூர்:திருப்போரூரில், கந்தசுவாமி கோவிலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.
கந்தசுவாமி கோவிலுக்கு வரும் வெளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள், மலை ஏறி கைலாசநாதரையும் வழிபட்டு செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மற்றும் அர்ச்சகர்களுக்கு, மலையில் கழிப்பறை வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, அனைவரின் பயன்பாட்டிற்காக, சுகாதார வளாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
பிரணவ மலையில், பக்தர்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை வசதி கிடையாது. கோவிலில் சுகாதார வளாகம் இல்லாததால், கோவிலுக்கு குடும்பத்துடன் வர தயக்கமாக உள்ளது.
அவசர நேரத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, மலைக்கோவில் வளாகத்தில், நிரந்தரமாக சுகாதார வளாகத்தை ஏற்படுத்தி தர, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையினர் மூலம், உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

