/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
/
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
ADDED : அக் 04, 2025 01:35 AM

மறைமலை நகர்:திருக்கச்சூர் கிராமத்திலுள்ள தியாகராஜர் கோவில் இடத்தில், கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், பழமையான தியாகராஜர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்குச் சொந்தமாக, திருக்கச்சூர் கிராமத்தில் பல இடங்களில் புன்செய், நன்செய் நிலங்கள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு வந்தது.
நாளடைவில், கிராம மக்கள் பலர் விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்கு மாறியதால், விவசாய நிலங்கள் தற்போது தரிசு நிலங்களாக மாறியுள்ளன.
அந்த வகையில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் அருகே, தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான, 1 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போது குப்பை குவிந்து, கழிவுநீரும் தேங்குகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தியாகராஜர் கோவில் நிலத்தில், 2009ம் ஆண்டு வரை விவசாயம் செய்யப்பட்டு, கோவிலுக்கு நெல் வழங்கப்பட்டது. நாளடைவில் விவசாயம் கைவிடப்பட்டது.
தற்போது, சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள வீடுகள், வணிக கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுதும், இந்த நிலத்தில் விடப்படுகிறது.
கழிவுநீரில் எருமை, பன்றி உள்ளிட்டவை இறங்கி கலக்குவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தேங்குவதால், நிலத்தடி நீர் மாசடைகிறது.
எனவே, தியாராஜர் கோவில் இடத்தில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.