/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களை வலுப்படுத்த கோரிக்கை
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களை வலுப்படுத்த கோரிக்கை
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களை வலுப்படுத்த கோரிக்கை
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களை வலுப்படுத்த கோரிக்கை
ADDED : நவ 08, 2025 01:31 AM

வண்டலுார்: வண்டலுார் அங்கன்வாடி மையம் வளாகத்திலுள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களை வலுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் பஜனை கோவில் தெருவில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 30 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் சேதம் அடைந்து, கான்கிரீட் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது.
இவை, அங்கன்வாடி மையத்திற்கு வந்து செல்லும் குழந்தைகள் மீது விழும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன், நீர்த்தேக்க தொட்டியின் துாண்களை கான்கிரீட் கலவை கொண்டு வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.