/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
/
துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 01:08 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில் ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட இரண்டு கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் ரெட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ள, அரசு துணை சுகாதார நிலையம் 2012 - 13 ம் நிதி ஆண்டில் காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. நிதியில் இருந்து 12 லட்ச ரூபாய் திட்ட மதிப்பில் கட்டப்பட்டது.
இந்த துணை சுகாதார நிலையம் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே, திறக்கப்படுவதால் கர்பிணியர் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் அல்லது 10 கி.மீ., தூரத்தில் உள்ள ரெட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, ஆப்பூர் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, மருத்துவர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும், என அப்பகுதியினம் கோரிக்கை விடுத்துள்ளனர்.