/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமந்தபுரம்- செங்குன்றம் சந்திப்பு சாலையை விரிவாக்க கோரிக்கை
/
அனுமந்தபுரம்- செங்குன்றம் சந்திப்பு சாலையை விரிவாக்க கோரிக்கை
அனுமந்தபுரம்- செங்குன்றம் சந்திப்பு சாலையை விரிவாக்க கோரிக்கை
அனுமந்தபுரம்- செங்குன்றம் சந்திப்பு சாலையை விரிவாக்க கோரிக்கை
ADDED : ஏப் 06, 2025 02:00 AM

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் , செங்குன்றம் - அனுமந்தபுரம் சாலை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில்- அனுமந்தபுரம் சாலை 9 கி. மீ., உள்ளது. இந்த சாலையை கொண்டமங்கலம், தென்மேல்பாக்கம், தர்காஸ், அஞ்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையை சிங்கபெருமாள் கோவிலில் இருந்து 1.5 கி.மீ., தூரத்தில் செங்குன்றம் -- அனுமந்தபுரம் சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மூன்று பக்கங்களிலும் சென்று வருகின்றன. இந்த பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.
எனவை இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், பயன்பாடு இல்லாமல் உள்ள பழைய தொலைபேசி மின்கம்பத்தையும் அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.