/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சரக்கு வாகன ஓட்டுநரை வெட்டிய ரவுடிக்கு 'காப்பு'
/
சரக்கு வாகன ஓட்டுநரை வெட்டிய ரவுடிக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 27, 2025 08:54 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, சரக்கு வாகன ஓட்டுநரை கத்தியால் வெட்டிய ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.
சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கலிபுல்லா, 26.
இவர் மீது மறைமலை நகர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பழைய குற்றவாளியான இவர், நேற்று முன்தினம் இரவு சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, கத்தியைக் காட்டி அங்கிருந்தோரை மிரட்டி உள்ளார்.
அப்போது அந்த வழியாக, சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 30, என்பவர், 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில் வந்த போது, கலிபுல்லா அந்த வாகனத்தை நிறுத்தி, கையால் தட்டியுள்ளார்.
இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திர மடைந்த கலிபுல்லா, கத்தியால் பிரகாஷின் தலை மற்றும் கைகளில் வெட்டி உள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்தோர், கலிபுல்லாவை மடக்கிப் பிடித்து தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், காயமடைந்த இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட பின், கலிபுல்லா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர்.