/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பன்றி திருடிய மூவருக்கு 'காப்பு'
/
பன்றி திருடிய மூவருக்கு 'காப்பு'
ADDED : மார் 12, 2024 10:41 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே முதுகரை கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன், 45. 20 ஆண்டுகளாக பன்றி வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 29ம் தேதி இரவு, சித்தாமூர் தனியார் திருமண மண்டபம் அருகே, தனக்கு சொந்தமான 19 பன்றிகளை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது, அவற்றில் மூன்று பன்றிகள் காணாமல் போய் உள்ளன. எங்கு தேடியும் கிடைக்காததால், சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், செய்யூர் பகுதியைச் சேர்ந்த சின்னராசு, 31, விஜயகுமார், 35, சுரேஷ், 21, ஆகிய மூவரும் மூன்று பன்றிகளையும் திருடி, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

