/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளியாற்றில் மாயமான சிறுவன் 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்
/
கிளியாற்றில் மாயமான சிறுவன் 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்
கிளியாற்றில் மாயமான சிறுவன் 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்
கிளியாற்றில் மாயமான சிறுவன் 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்
ADDED : டிச 17, 2024 11:42 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் புவனேஷ், 17.
இவர் மதுராந்தகம், ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி காலை நண்பர்களுடன், மதுராந்தகம் ஏரி கிளியாறு கலங்கல் பகுதிக்கு குளிக்கச் சென்றார்.
ஏரியில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், ஏரிக்கு வரும் மொத்த தண்ணீரும், கலங்கல் பகுதி வழியாக வெளியேற்றப்படுகிறது.
நேற்று முன்தினம், 5,000 கன அடி தண்ணீர் சென்றது.
ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் கலங்கல் பகுதியில், நண்பர்களுடன் குளித்த புவனேஷ், திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
தகவலின்படி வந்த மதுராந்தகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடினர்.
நேற்று முன்தினம், சிறுவன் மாயமான பகுதியில் நீர் வரத்தை கட்டுப்படுத்த, லாரி வாயிலாக மண் கொட்டி தண்ணீரின் வேகம் குறைக்கப்பட்டது.
பின், ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன், மீட்பு படையினர் தண்ணீரில் மூழ்கி தேடினர்.
ஏரி கலங்கல் பகுதியில் பராமரிப்பு பணி முழுமை பெறாமல், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் உள்ளன.
சிறுவன் அங்குள்ள இரும்பு கம்பிகளில் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது, ஏரிக்கு வரும் 600 கன அடி தண்ணீர் வெளியே செல்கிறது. மாணவன் மாயமானதாக கருதப்படும் பகுதியில், மண் கொட்டி தண்ணீர் செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது.
பின், நேற்றும் தீயணைப்புத் துறையினர் தேடிய நிலையில், சிறுவன் கிடைக்கவில்லை. மூன்றாவது நாளாக தேடும் பணி தொடர்ந்தது.