/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் அன்னதானம் 2026 டிசம்பர் வரை முன்பதிவு
/
கந்தசுவாமி கோவிலில் அன்னதானம் 2026 டிசம்பர் வரை முன்பதிவு
கந்தசுவாமி கோவிலில் அன்னதானம் 2026 டிசம்பர் வரை முன்பதிவு
கந்தசுவாமி கோவிலில் அன்னதானம் 2026 டிசம்பர் வரை முன்பதிவு
ADDED : ஜூன் 17, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக தினமும் அன்னதானத்திற்கு முன்பதிவு செய்து அதற்கான கட்டணம் செலுத்துகின்றனர். அன்னதானத்திற்கு, 100 பேருக்கு 3,500 ரூபாய் செலுத்தப்படுகிறது. வரும் 2026 டிசம்பர் மாதம் வரை பக்தர்கள் அன்னதானம் வழங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர், என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.