/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்
/
அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்புவாசிகள் போராட்டம்
ADDED : மே 23, 2025 02:49 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், ஸ்ரீராம் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 1,200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்போர் தங்களுக்கென, நலச்சங்கம் உருவாக்கினர். பின், இந்த நலச்சங்கம் தற்போதுமூன்றாக பிரிந்துள்ளது.
இதில் 'பேஸ் - 3' நலச் சங்கத்தினரை, பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ள நலச் சங்கத்தினர் நீச்சல் குளம், கார் பார்க்கிங், கார் வாஷ் மற்றும் பேட்மின்டன் மைதானம் ஆகியவற்றை உபயோகிக்க அனுமதிக்கவில்லை.
இதைக் கண்டித்து, 'பேஸ் - 3' நலச் சங்கத்தினர், அடிக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயிலில், நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கூடுவாஞ்சேரி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.