/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளாங்காடு ஏரியில் மண் எடுக்க தடை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
/
விளாங்காடு ஏரியில் மண் எடுக்க தடை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
விளாங்காடு ஏரியில் மண் எடுக்க தடை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
விளாங்காடு ஏரியில் மண் எடுக்க தடை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : மே 14, 2025 06:17 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே விளாங்காடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமே கிராம மக்களின் பிரதான தொழிலாகும்.
விவசாய நிலங்களுக்கு அருகே கடந்த ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவில் புதிதாக தனியார் கல்குவாரி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் ஏரி நீர்வரத்து பாதிக்கப்பட்டு விவசாயம் முழுதும் பாதிக்கும். பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிகளால் விவசாயக் கிணறுகள் மற்றும் வீடுகள் சேதமடையும். மேலும் அதிகபடியான லாரிகள் வந்து செல்வதால், சாலையில் செல்ல பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக , பாலம் அமைக்கப்படும் இடங்கள் மற்றும் தாழ்வாக உள்ள பகுதிகளில் மண் கொட்டி உயர்த்தி அமைக்க பரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் விளாங்காடு ஏரியில் 50 ஆயிரம் கனமீட்டர் மண் எடுக்க சாலை அமைக்கும் தனியார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஏரியில் மண் எடுப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனை தெரிவிக்க வருவாய்த்துறை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அஞ்சலை தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் ஆலோசிக்கப்பட்டு ஏரியில் இருந்து மண் எடுக்க தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.