/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநகராட்சியுடன் இணைய தீர்மானம்
/
மாநகராட்சியுடன் இணைய தீர்மானம்
ADDED : டிச 15, 2025 03:50 AM
சோழிங்கநல்லுார்: புறநகரில் உள்ள ஏழு ஊராட்சிகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, சோழிங்கநல்லுார் தொகுதி நலச்சங்க பேரமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சோழிங்கநல்லுார் தொகுதி குடியிருப்போர் பொது நலச்சங்க பேரமைப்பின், பொதுக்குழு கூட்டம் நேற்று, ஓ.எம்.ஆரில் நடந்தது. இதில், 60க்கும் மேற்பட்ட நலச்சங்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ஒரு கி.மீ., சுற்றளவில் வீடு கட்ட தடை விதிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் விதித்த உத்தரவை ரத்து செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேடவாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், மேடவாக்கம், ஒட்டியம்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்த ஏழு ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்.
தொகுதியில், அரசு இடத்தில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பெருங்குடி குப்பை கிடங்கால் நிலத்தடிநீர் மாசடைவதால், வனத்துறை வசம் ஒப்படைத்து, குடியிருப்பு அல்லாத பகுதிகளில் குப்பையை கொட்ட வேண்டும். பள்ளிக்கரணை அணை ஏரியை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

