/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் கூடுவாஞ்சேரியில் விபத்து அபாயம்
/
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் கூடுவாஞ்சேரியில் விபத்து அபாயம்
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் கூடுவாஞ்சேரியில் விபத்து அபாயம்
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் கூடுவாஞ்சேரியில் விபத்து அபாயம்
ADDED : பிப் 09, 2024 10:10 PM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி காமராஜர் தெருவில் சர்ச் உள்ளது. அதன் காம்பவுண்ட் சுவரை ஒட்டிய தெருவில், நடுப்பாதையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு, ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மூடி உடைந்து சேதம் ஆகியுள்ளது.
அந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள், குறிப்பாக தபால்காரர், காஸ் வினியோகம் செய்வோர் இருசக்கர வாகனங்களில் வரும்போது, கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், தெருவில் உள்ள குழந்தைகள் விளையாடும் போதும், சைக்கிளில் செல்லும் போதும், பள்ளத்தில் விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
சேதமடைந்துள்ள மூடியை சீரமைக்கக்கோரி, அப்பகுதிவாசிகள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நகராட்சி சார்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, தெருவின் நடுவில் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.