/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
/
மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
ADDED : ஜூன் 08, 2025 02:04 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி 6வது மற்றும் 7வது வார்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நாளுக்கு நாள் அடுக்குமாடி வீடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த பகுதியில் உள்ள காட்டாங்கொளத்துார் -- காவனுார் பிரதான சாலை மற்றும் முக்கிய தெருக்களின் இருபுறமும் சிமென்ட் மழைநீர் வடிகால்வாய்கள் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் தற்போது சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிரம்பி வழிகின்றன. மேலும் பிளாஸ்டிக் குப்பை மற்றும் மண் உள்ளிட்டவை கால்வாய் முழுதும் அடைத்து உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
துர்நாற்றம் வீசுவதோடு கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கால்வாய்களை சுத்தம் செய்து துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.