/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த மின்கம்பத்தால் மின்மாற்றி விழும் அபாயம்
/
சேதமடைந்த மின்கம்பத்தால் மின்மாற்றி விழும் அபாயம்
ADDED : ஜன 25, 2025 12:23 AM

செய்யூர், செய்யூர் அருகே புத்துார் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அரசு ஆரம்பப் பள்ளி எதிரே உள்ள மின்மாற்றி வாயிலாக கிராமத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்வெளிகளுக்கு என 300 மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.
மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது, நாளடைவில் சிமென்ட் கலவைகள் உதிர்ந்து, இரும்புக் கம்பி வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் முறிந்து, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

