/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேட்டைக்காரக்குப்பம் ஊராட்சியில் 40 ஆண்டுக்கு பின் சாலை அமைப்பு
/
வேட்டைக்காரக்குப்பம் ஊராட்சியில் 40 ஆண்டுக்கு பின் சாலை அமைப்பு
வேட்டைக்காரக்குப்பம் ஊராட்சியில் 40 ஆண்டுக்கு பின் சாலை அமைப்பு
வேட்டைக்காரக்குப்பம் ஊராட்சியில் 40 ஆண்டுக்கு பின் சாலை அமைப்பு
ADDED : நவ 18, 2025 03:44 AM

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அருகே வேட்டைக்காரக்குப்பம் ஊராட்சியில், 40 ஆண்டுகளுக்குப் பின், குளக்கரை தெருவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
பவுஞ்சூர் அடுத்த வேட்டைக்காரக்குப்பம் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள குளக்கரை தெருவில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த 40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல், இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் ஊராட்சி சார்பாக, கனிம வள நிதியில் இருந்து 24 லட்சம் ரூபாயில், பிள்ளையார் கோவில் தெரு மற்றும் குளக்கரை தெருக்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.