/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் 15 ஆண்டுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்
/
வண்டலுாரில் 15 ஆண்டுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்
வண்டலுாரில் 15 ஆண்டுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்
வண்டலுாரில் 15 ஆண்டுக்கு பின் சாலை அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மே 09, 2025 02:19 AM

வண்டலுார்':நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வண்டலுார், சிங்காரத் தோட்டம், மூகாம்பிகை அம்மன் கோவில் தெருவில், சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நான்காவது வார்டுக்கு உட்பட்ட மூகாம்பிகை அம்மன் கோவில் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு, கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இது குறித்து பகுதிவாசிகள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது குறித்து, நம் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, 15வது நிதிக்குழு திட்டத்தின் வாயிலாக, 6 லட்சம் ரூபாய் செலவில், பிணைப்பு சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.