ADDED : மார் 14, 2026 06:39 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், சாலையோர பூங்கா பணி துவங்கி, கிடப்பில் போடப்பட்டுள்ளதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதி சாலை சந்திப்புகளில் அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது.
சந்திப்பு பகுதிகளில், தலா ஒரு சாலையோர பூங்கா, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு, கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீடு செய்தது.
இப்பணிக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் மூலம் கடந்த ஆண்டு ஜன., மாதம் பணி துவங்கி நடைபெற்றது. அதன்பின், பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையோர பூங்கா பணியை விரைந்து முடிக்க கலெக்டர் மாலதி ஹெலன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
