/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேலையூரில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் திருட்டு
/
சேலையூரில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் திருட்டு
ADDED : நவ 09, 2025 02:30 AM
சேலையூர்: சேலையூர் அருகே இரண்டு வீடு, இரண்டு கடை என, அடுத்தடுத்து நான்கு இடங்களில், பூட்டை உடைத்து, பணம், மொபைல் போன்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தத்தை சேர்ந்தவர் மகாதேவன்.
அப்பகுதியில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல், மாடம்பாக்கம், பெரியார் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் லோகேஷ். நேற்று முன்தினம் இரவு, வீட்டு கதவை திறந்து வைத்து துாங்கினார்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது, வீட்டில் இருந்த இரண்டு மொபைல் போன்கள், 28,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, அதே பகுதியில், ஸ்ரீபவானி அடகு கடை மற்றும் ராஜு என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
புகாரின்படி, சேலையூர் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், ஹெல்மெட் அணிந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

