/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் சிற்ப வளாகத்தில் பாறைக்கல் நடைதளம் அமைப்பு
/
மாமல்லபுரம் சிற்ப வளாகத்தில் பாறைக்கல் நடைதளம் அமைப்பு
மாமல்லபுரம் சிற்ப வளாகத்தில் பாறைக்கல் நடைதளம் அமைப்பு
மாமல்லபுரம் சிற்ப வளாகத்தில் பாறைக்கல் நடைதளம் அமைப்பு
ADDED : டிச 10, 2024 12:08 AM

மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களில், ஐந்து ரதங்கள் குறிப்பிடத்தக்கவை. இச்சிற்ப வளாகத்தில் முன்பு, பயணியர் மணற்பரப்பில் நடந்து சென்று சிற்பங்களை ரசிப்பர்.
பயணியர் அதிகரித்த நிலையில், வளாகத்தின் நான்குபுற எல்லைப் பகுதியை ஒட்டி, பிரத்யேக பாறைக்கல் நடைபாதை அமைக்கப்பட்டது. சிற்பங்களை அருகில் சென்று காண விரும்புவோர், மணற்பரப்பில் நடந்து செல்வர்.
மற்றவர்கள் நடைபாதையில் வலம் வந்து, சிற்பங்களை ரசிப்பர். பாறைக்கல் நடைபாதையில் இணைப்பு பகுதிகளில், நிலமட்ட நிலைக்கேற்ப உயர்ந்தும், தாழ்ந்தும் இருந்தன. பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ல் இச்சிற்பங்களை ரசித்தனர்.
அப்போது, மரத்தாலான சாய்வு நடைதளம் அமைத்தனர். நாளடைவில் இத்தளம் வெயில், மழையில் சேதமடைந்ததால், சுற்றுலா பயணியர் கடக்க சிரமப்பட்டனர். இதையடுத்து, தொல்லியல் துறையினர் இந்த சேதமான மர நடைதளத்தை அகற்றி, பாறைக்கல்லில் நடைதளம் அமைத்து வருகின்றனர்.

