ADDED : மார் 14, 2026 06:15 AM
வண்டலுார்: வண்டலுாரில், பொது மக்களை அச்சுறுத்தி, மீண்டும் சச்சரவுகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வண்டலுார் அடுத்த மண்ணிவாக்கம், ராசாத்தி கலைஞர் நகரை சேர்ந்தவர் சத்தியசீலன், 24. இவர் மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
தவிர, காட்டாங்கொளத்துார், வடக்கு ஒன்றிய தி.மு.க., முன்னாள் செயலர் ஆராமுதன் கொலை வழக்கிலும் சிறை சென்று திரும்பினார்.
தற்போது ஜாமினில் வந்துள்ள சத்தியசீலன், பொது மக்களை அச்சுறுத்துவது, கடைகளில் மாமூல் கேட்பது என, மீண்டும் ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருவதாக, பல தரப்பிலிருந்தும் வண்டலுார் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, சத்தியசீலனை நேற்று கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர்.
