/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிக்க பணம் தர மறுத்த தாய் ரவுடி துாக்கிட்டு தற்கொலை
/
குடிக்க பணம் தர மறுத்த தாய் ரவுடி துாக்கிட்டு தற்கொலை
குடிக்க பணம் தர மறுத்த தாய் ரவுடி துாக்கிட்டு தற்கொலை
குடிக்க பணம் தர மறுத்த தாய் ரவுடி துாக்கிட்டு தற்கொலை
ADDED : அக் 06, 2025 01:23 AM
பம்மல்:மது அருந்த தாய் பணம் தராததால், ரவுடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பம்மல் அடுத்த அனகாபுத்துார் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு, 34. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போதை பழக்கத்திற்கு அடிமையான குமரகுரு தன் கையை பிளேடால் அடிக்கடி கிழித்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்.
நேற்று முன்தினம் இரவு தன் தாய் செல்லகனியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் செல்லகனி அருகில் உள்ள இரண்டாவது மகன் வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று காலை, செல்லகனி வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் அறையில் குமரகுரு துாக்கிட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து வந்த சங்கர்நகர் போலீசார் குமரகுரு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.